Wednesday, March 18, 2026

Abheethi Stavam - 05 - திருவரங்கன் அருளால் அச்சமின்மை - Fearlessness through Devotion to Lord Ranganatha

 श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 4.श्री अभीतिस्तवः Abheethi Stavam ஸ்ரீ அபீதிஸ்தவம்

5- திருவரங்கன் அருளால் அச்சமின்மை - Fearlessness through Devotion to Lord Ranganatha
भवन्तमिह यः स्व धी नियत चेतनाचेतनं 
पनायति नमस्यति स्मरति वक्ति पर्येति वा । 
गुणं कमपि वेत्ति वा तव गुणेश गोपायितुः 
कदाचन कुतश्चन क्वचन तस्य न स्यात् भयम् ॥ 5 ॥

पदच्छेदः
भवन्तम् इह यः स्व धी नियत चेतन अचेतनं 
पनायति नमस्यति स्मरति वक्ति पर्येति वा । 
गुणं कमपि वेत्ति वा तव गुणेश गोपायितुः 
कदाचन कुतश्चन क्वचन तस्य न स्यात् भयम् ॥ 5 ॥

गुणेश - உயர்குணங்களுக்கு உறைவிடமானவனே! 
स्व धी नियत - தன் ஸங்கல்பத்தால் கட்டுப்படுத்திய 
चेतन अचेतनं - சேதா அசேத நங்களையுடைய 
भवन्तम् - உன்னை 
यः - எவன் 
इह - இவ்வுலகில் 
पनायति - துதிக்கின்றானோ 
नमस्यति - வணங்குகின்றானோ 
स्मरति - தியானிக்கின்றானோ  
वक्ति - (திருநாமத்தைச்) சொல்லுகின்றானோ 
पर्येति वा - (அல்லது) ப்ரதக்ஷிணம் செய்கின்றானோ 
गोपायितुः - (அல்லது) காப்பவனான 
तव - உன்னுடைய 
कमपि  - எதாவது ஒரு 
गुणं - குணத்தை 
वेत्ति वा -அறிகின்றானோ 
तस्य - அவனுக்கு 
कदाचन - ஒருபொழுதும் 
कुतश्चन - எங்கிருந்தும் 
क्वचन - எந்த இடத்திலும்  
भयम् - பயமென்பது 
न स्यात् – உண்டாகாது

திருவரங்கன் அருளால் அச்சமின்மை

திருக்கல்யாண குணங்கள் நிறைந்த திருவரங்க நகரப்பனே! சேதநம் அசேதநம் ஆகிய ப்ரபஞ்சம் முழுவதையும் உன் ஸங்கல்பத்தின் வழியே நடக்குமாறு கட்டுப்படுத்தி வைத்துள்ளாய். இத்துணைப் பெருமையனான உன்னை எவன் வாயினால் துதிக்கின்றானே, அல்லது வணங்குகின்றானோ, அல்லது தியானம் செய்கின்றானோ, அல்லது உன் திருநாமத்தை ஸங்கீர்த்தநம் செய்கின்றானோ, அல்லது ப்ரதக்ஷிணம் செய்கின்றானோ, அல்லது ஸர்வரக்ஷகனான உன் திருக்கல்யாண குணங்களுள் ஏதாவது ஒன்றை மனத்தில் அநுஸந்திக்கின்றானோ, இவற்றுள் ஏதேனும் ஒரு செயலைச் செய்தவனுக்கு எக்காலத்திலும் எங்கிருந்தும் எவ்விடத்திலும் அச்சமே உண்டாகாது. 

Fearlessness through Devotion to Lord Ranganatha

O Lord of Srirangam, who is filled with countless divine and auspicious qualities! You control the entire universe—both sentient and non-sentient—making everything function according to Your divine will. Such is Your greatness. Whoever praises You with his speech, bows down to You, meditates upon You, sings Your sacred names, performs circumambulation around You, or reflects in his mind on even one of Your divine and auspicious qualities—such a person will never experience fear at any time, in any place, or under any circumstance.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸